June 9, 2018
தண்டோரா குழு
கோவை மத்திய சிறையில் 22 ஆண்டுகளாக சிறையில் உள்ள தனது தந்தையை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்தது.வயோதிகம் கருணை அடிப்படையில் 67பேர் விடுதலை செய்யபட்டுள்ளனர்.ஆனால் இஸ்லாமிய கைதிகள் இதுவரை யாரும் விடுவிக்கப்படவில்லை.தமிழக உயர்நீதிமன்றம் 6 வார காலதிற்குள் விடுவிக்க உத்தரவிட்டும் தமிழக அரசு அவர்களை விடுவிக்க எந்த நடவடிக்கைகள் எடுக்கபடவில்லை என தெரிவித்தனர்.
மேலும்,இது தொடர்பாக காவல் துறை உயர் அதிகாரிகளிடம் முறையிடப்பட்டதாகவும்,மாவட்ட ஆட்சியர் மூலம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளபடும் என தெரிவித்ததை தொடர்ந்து இன்று மாவட்ட ஆட்சியரிடம் சிறையில் உள்ள பாட்சாவின் மகள்கள் முபினா,ருக்ஷான மகன் சித்திக் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.