• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை 63 வது வார்டு ம.நீ.ம வேட்பாளர் ரம்யா வேணுகோபால் வேட்புமனு தாக்கல்

February 2, 2022 தண்டோரா குழு

தெளிவான செயல் திட்டத்துடன் முன்னெடுக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பிரச்சாரத்தின் மூலம் கோவை 63 வது வார்டு பகுதியில் வெற்றி வாய்ப்பு உறுதியாகியுள்ளதாக அக்கட்சியின் கவுன்சிலர் வேட்பாளர் ரம்யா வேணுகோபால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கோவை தெற்கு தொகுதியின் 63 வது வார்டு பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் ரம்யா வேணுகோபால் போட்டியிடுகிறார். தொடர்ந்து தன் பிரச்சாரத்தை அவர் தீவிரப்படுத்தி வரும் நிலையில் தனது வேட்புமனுவை கோவை மத்திய மண்டல அலுவலகத்தில் தாக்கல் செய்தார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,

63 வது வார்டு பகுதியில் மக்களின் அடிப்படை வசதிகள் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று உறுதியளித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருவதாக கூறினார். மேலும், தான் வெற்றியடையும் பட்சத்தில் அப்பகுதியில் இருக்கும் முக்கிய பிரச்சனையான குப்பை கழிவுகளை அகற்ற முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 63 வார்டு பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு, தெருவிளக்கு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் தீர்வு காண பணி செய்வேன் என்றும் அவர் உறுதியளித்தார்.

மேலும் படிக்க