March 19, 2018
தண்டோரா குழு
கோவை மாவட்ட உழவர் சந்தையில் ஏற்படும் முறைகேடு்களை தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் காய்கறிகளோடு வந்து விவசாயிகள் சங்கம் இன்று(மார்ச் 19)மனு அளித்தனர்.
கோவை சிங்காநல்லூரில் பகுதியில் உழவர் சந்தைகளில் உள்ள குளிர்பாதன கிடங்கை தனியாரின் கட்டுப்பாட்டில் விடாமல் விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டுமென்றும் பொது மக்களுக்க்கும் விவசாயிகளுக்கும் பாதிக்காத வகையில் காய்கறிகளை விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
மேலும்,உழவர் சந்தையின் நிர்வாக அதிகாரி உரிய நேரத்திற்கு பணிக்கு வராததாலும் தன் பணிகளை செய்யாததாலும் பல்வேறு முறைகேடுகள் ஏற்படுவதாகவும்,உழவர் சந்தைகளில் கண்காணிப்பு கேமரா பொறுத்தபட வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வைத்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் காய்கறிகளோடு வந்து விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.