• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஹாஷ் 6 ஹோட்டல்ஸில் கிறிஸ்துமஸ் கேக் கலவை கலக்கும் திருவிழா

November 15, 2019 தண்டோரா குழு

கிறிஸ்துமஸ் விழாவிற்கு தயாரிக்கப்படும் கேக்களுக்கான மூலப் பொருள்கள் கலக்கும் திருவிழா கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் சாய்பாபா கோவில் எதிரில் அமைந்துள்ள ஹாஷ் 6 ஹோட்டலில் நடைபெற்றது. பாரம்பரியமாக நடைபெறும் இந்த விழா, கிறிஸ்துமஸ் விழாவிற்கான துவக்க விழாவாகக் கருதப்பட்டது.

கேக் தயாரிக்கும் கலவையுடன் தேங்காய், முந்திரி, பாதாம் செதில்கள் மற்றும் பிஸ்டாச்சியோ பழங்கள், ஆரஞ்சு தோலுரித்தல், கறுப்பு கரும்பு, அத்திப்பழம், உலர்ந்த உப்பு, அத்திப்பழம், இலவங்கப்பட்டை மற்றும் கிராம்புகள் ஆகியவை சேர்க்கப்படும்.இவற்றுடன் விஸ்கி, ரம், ஓட்கா, ஜின், மது, பீர் மற்றும் தங்கப் பாகு, வெல்லப்பாகு, தேன் மற்றும் வெண்ணிலா சாரம் போன்றவற்றை கேக் கலவையை 150 கிலோ எடை வரும் வரை கலப்பார்கள். விழாவில் கலந்து கொள்வோர், அனைவரும் தலைமை சமையல் கலைஞர்களை போல உடையும், தலைப்பாகையும் அணிந்து இருக்க வேண்டும். விழாவின் போது, இவர்கள் அனைவரும் கேக்கள் செய்வதற்காக மூலப் பொருள்களை சரியான விகிதத்தில் கலப்பார்கள்.

இந்தக் கலவை கிறிஸ்துமஸ் வரை காற்று புகாத பைகளில் அடைத்து வைத்து, கேக் தயாரிக்கப்படும். இந்த விழாவிற்கு ஹாஷ் 6 ஹோட்டலின் தலைமை செப் ராஜா தலைமை வகித்து, கேக் கலவை கலக்கும் விழாவை துவக்கி வைத்தார்.

இதுகுறித்து கோவை ஹாஷ் 6 ஹோட்டல் தலைமை செயல்பாட்டு அதிகாரி டாக்டர். குமார் கூறுகையில்,

கிறிஸ்துமஸ் விழாவிற்காக கேக் கலக்கும் விழாவானது உலகெங்கும் நடைபெறும் பாரம்பரிய திருவிழா கருதப்படுகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த விழாவை எங்களின் ஹாஷ் 6 ஹோட்டலில் நடத்துவதில் நாங்கள் பெருமை அடைகிறோம். விழாவில் பங்கேற்பவர்கள் அனைவரும் மகழ்ச்சி அடைவர் என நம்புகிறோம் என்றார்.

விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக டாக்டர். லீமா ரோஸ் மார்டின், கலந்து கொண்டார். மேலும் விழாவில் கோவை உமன் சென்டர், மருத்துவ இயக்குனர் டாக்டர். மிருதுபாஷினி கோவிந்தராஜன், குளோப் கிளாசிக் 2018 போட்டியில் ரன்னராக வெற்றி பெற்ற டாக்டர். ஜெயா மகேஷ், ஹாஷ் 6 ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் கார்த்திகேயன், துணைப்பொதுமேலாளர் சத்யன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க