• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி தமிழர் திருநாள் விழா

January 13, 2017 தண்டோரா குழு

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் தமிழர் திருநாளை முன்னிட்டு தமிழர் திருநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தமிழர் திருநாள் சனிக்கிழமை (ஜனவரி 14) உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த் துறையின் தமிழ் இலக்கியப் பேரவையின் சார்பில் தமிழர் திருநாள் விழா கொண்டாடப்பட்டது. அவ்விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் சித்ரா முன்னிலை வகிக்க சிறப்பு விருந்தினராக மகேஸ்வரி சற்குரு கலந்து கொண்டார்.

இவ்விழாவில், வழக்காடு மன்றம், பொங்கல் பொங்க வைக்கும் போட்டி, கோலப் போட்டி, கிராமிய நடனம், உரியடிப் போட்டி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், விழாவில் கல்லூரி மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் பாரம்பரிய உடை அணிந்து தமிழர் திருநாளை விழாவை கொண்டாடினர்.

மேலும் படிக்க