• Download mobile app
16 Aug 2025, SaturdayEdition - 3475
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி , பெங்களூர் கேப்ஜெமினி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

November 3, 2021 தண்டோரா குழு

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மற்றும் பெங்களூர் கேப்ஜெமினி நிறுவனத்துடன் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.பன்னாட்டு பொறியியல் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை சேர்ந்த கேப்ஜெமினி , சுமார் இரண்டரை லட்சம் பொறியியல் வல்லுனர்களை உலகம் முழுக்க கொண்டுள்ளது.

இந்த நிறுவனம் பல்வேறு பொறியியல் துறை , விண்வெளி , சுகாதாரம் இன்டர்நெட் ஆஃ திங்ஸ் மென்பொருள் பொறியியல் மற்றும் இண்டஸ்ட்ரி 4.0 என தங்களின் தொழில்நுட்பத் திறனை வளர்த்தி கொண்டு வருகிறது மேலும் , வளர்ந்து வரும் தொழில் நுட்ப நிறுவனங்கள் , இண்டஸ்ட்ரி 4.0 மூலம் தற்போது மிக வேகமாக தானியங்கி முறை கொண்டு சிறிய அளவிலான தொழில்துறை திறன் முதல் பெரிய அளவிலான உற்பத்தித் திறனை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் , கேப் ஜெமினியின் பொறியியல் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறையின் நிர்வாக இயக்குனர் திரு சந்திரா ரெட்டி கையெழுத்திட்டார் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் ஆராய்ச்சியில் ஈடுபடும் பேராசிரியர்களும் மாணவ மாணவியர்களும் இன்டர்நெட் ஆஃ திங்ஸ் , உள்பதிக்கப்பட்ட அமைப்பு , இண்டஸ்ட்ரி 4.0 மென்பொருள் பொறியியல் துறை எனப் பல்வேறு துறைகளில் தங்களின் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளின் யுக்தியை வளர்த்து கொள்ளலாம் .

மேலும் , கல்லூரியின் இயந்திரவியல் துறை , தகவல் தொழில்நுட்பத் துறை கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை , வானூர்தியில் துறை , மின்னணு மற்றும் தகவல் தொடர்பு துறை , ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் துறைகள் ஒருங்கிணைந்து , பல்வேறு விதமான தொழில்துறை இணைப்புடன் கூடி நிதிஉதவி ஆராய்ச்சி செய்ய மிகவும் பயனுள்ளதாக அமையுமாறு களங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளது . இந்நிகழ்ச்சிக்கு , எஸ் என் ஆர் சன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் டி லட்சுமி நாராயணசுவாமி வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகளை தெரிவித்தார் . கல்லூரி முதல்வர் என் ஆர் அலமேலு , துறைத்தலைவர்கள் , கல்லூரியின் தொழில் துறை மையத்தின் தலைவர் கணேஷ் , ஆகியோர் கலந்து கொண்டனர் .

மேலும் படிக்க