• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஸ்மார்ட் சிட்டி அமைப்பு, கோவை இரத்தினம் கல்விக் குழுமங்களின் ஏ.ஐ.சி ரைஸ் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

April 9, 2022 தண்டோரா குழு

கோவை ஈச்சனாரி சாலையில் உள்ள ரத்தினம் கல்லூரியில்கோவை ஸ்மார்ட் சிட்டி அமைப்பு, கோவை இரத்தினம் கல்விக் குழுமங்களின் ஏ.ஐ.சி ரைஸ் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கோவை ஸ்மார்ட் சிட்டி அமைப்பின் நிர்வாக இயக்குநர் ராஜா கோபால் சுங்கரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தொடர்ந்து கோவை இரத்தினம் கல்விக் குழுமங்களின் தலைவர் மதன் ஏ. செந்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

தொடர்ந்து அவர் பேசுகையில்,

இதன் முக்கிய நோக்கமாக ஸ்மார்ட் சிட்டியில் புதிய தொழில் முனைவோர் மையம் உருவாக்குதல் மற்றும் ஐக்கிய நாடுகளின் முன்னேற்றத்திற்கான இலக்குகளை அடைவது ஆகும்.விழாவின் ஒருபகுதி நோக்கமே ஸ்மார்ட் சிட்டியில் புதிய தொழில் முனைவோர் மையம் உருவாக்குதல் ஆகும். இதில் மக்களின் அன்றாட சிக்கல்களை கோவை ஸ்மார்ட் சிட்டி அமைப்பு தரும் அதற்கு தீர்வு புதிய யோசைனைகளை கோவை இரத்தினம் கல்விக் குழுமங்களின் ஏ.ஐ.சி ரைஸ் மூலம் ஒரு கருவியாக மாற்றலாம். இதற்கு உரிய நடுவர் மூலம் அந்த யோசனைகள் தேர்வு செய்யப்படும்.

ஏ.ஐ.சி ரைஸில் நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள மாணவர்கள் 6 மாதம் பயிற்சி பெற்று வருகிறார்கள். மேலும் இதில் பல்வேறு வழிமுறைகள் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுத்து பட்டம் பெறுக்கின்றனர்.இந்த மாணவர்கள் கோவை ஸ்மார்ட் சிட்டி அமைப்பு தரும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பார்கள் அதற்கு ஏ.ஐ.சி ரைஸ் துணை புரியும் என்றனர்.

மேலும் படிக்க