• Download mobile app
27 Jul 2025, SundayEdition - 3455
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு;பழைய நினைவுகளை பகிர்ந்து உற்சாகம்

July 27, 2025 தண்டோரா குழு

கோவை ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் 1995ம் ஆண்டு பள்ளி இறுதியாண்டு (12ம் வகுப்பு) படித்த முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி,இன்று (ஜூலை 26) மாலை பள்ளி அரங்கில் நடைபெற்றது.

30 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் வகையில் முத்து விழாவாகஇந்த கொண்டாட்டம் அமைந்தது. அந்த ஆண்டில் படித்த மாணவ, மாணவிகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் இந்தவிழாவில் பங்கேற்பதற்காகவே வருகை தந்திருந்தனர்.

விழா தொடங்கியதும் தங்களோடு படித்தவர்களில் சிலர் மரணமடைந்திருந்த நிலையில் அவர்களுக்கு இரங்கல் தெரிவித்து அனைவராலும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. விழாவில் பள்ளி நிர்வாகிகள், 1995ல் படித்த மாணவர்களுக்கு பாடம் நடத்திய அப்போதைய ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் இன்னாள் ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

அப்போதைய ஆசிரியர்,ஆசிரியைகள் சிலர் தங்களிடம் படித்த மாணவ,மாணவிகள் குறித்த பல்வேறு விஷயங்களை விழா மேடையில் நினைவுகூர்ந்து தங்கள் மகிழ்ச்சியைப்பகிர்ந்து கொண்டனர். அதேபோல முன்னாள்மாணவ, மாணவிகள் சிலரும் தங்கள்பழைய நினைவுகளை நெஞ்சுருக எடுத்துரைத்து மகிழ்ந்ததோடு நன்றியை வெளிப்படுத்தும் வகையில் பேசினர்.

பள்ளிப்பாடலை அனைவரும் ஒன்றிணைந்து பாடியது பரவசமாக இருந்தது.தங்களுக்குப் பாடம் நடத்தியிருந்த ஆசிரியர்கள், ஆசிரியைகளுக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில் நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தனர்.விழாவில் முன்னாள் மாணவர்கள் முத்து விழாவையொட்டி கணினி துறையில் பாடங்களை எளிதில் கற்றுக் கொள்வதற்காக கோவை மாவட்டம் கணுவாய் அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் 25 பேருக்கு ஹெட் போன்களை வழங்கினார்கள்.

பல ஆண்டுகளுக்கு பின்னர் ஒருவரை ஒருவர் சந்தித்தபோது ஒவ்வொருவர் முகத்திலும் மலர்ச்சியைக் காண முடிந்தது. யார், யார் எங்கே இருக்கிறார்கள்? என்ன செய்கிறார்கள்? தங்கள் வாழ்க்கைத் துணைவர்கள் என்ன செய்கிறார்கள்? குழந்தைகள் என்ன படிக்கிறார்கள்? என்பன போன்ற பல்வேறு தகவல்களைப் பரிமாறிக் கொண்டனர்.

தாங்கள் படித்த வகுப்பறையில் போய் அமர்ந்து பழையன பலவற்றை நினைவுப்படுத்தியதோடு, மீண்டும் மாணவர்களாக மாறினால் நன்றாக இருக்குமே என்றெல்லாம் கூறி மனம் விட்டு பேசி மகிழ்ந்தனர்.

இந்த நெகிழ்ச்சியான சந்திப்பு, ஒவ்வொருவருக்கும் உற்சாகத்தைத் தந்ததோடு மீண்டும் மீண்டும் சந்திக்க வேண்டும் என்ற ஆசையையும் ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது.இந்த நிகழ்ச்சியை முன்னாள் மாணவ, மாணவிகள் இனித்தா, உமா மகேஸ்வரி, ஜெயந்தி, பிரியா, காயத்ரி, ஆனந்த் ரோஸ் ஜான், கிருஷ்ணா, காலின் கிறிஸ்டோபர், கதிரவன், வின்ஸ்டன், டேவிட் அப்பாதுரை ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.

மேலும் படிக்க