June 2, 2021
தண்டோரா குழு
கொரோனா இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது.குறிப்பாக கோவையில் கொரோனா பரவல் மிக தீவிரம் காட்டி வரும் நிலையில்,கோவை வைசியாள் வீதி தர்மராஜா கோவில் அருகே ஸ்ரீ நாகசக்தி அம்மன் சமூக ஆன்மீக அறக்கட்டளை நிறுவனர் ஸ்ரீஸ்ரீ சிவசண்முக பாபுஜி சுவாமிகள் ஏற்பாட்டில், பாஜக உக்கடம் மண்டல் தலைவர் சேகர் தலைமையில், கோவை தெற்கு தொகுதி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். சுமார் 1000 பேருக்கு முக கவசமும் வழங்கப்பட்டது.
கெம்பட்டி காலனி, வைசியாள் வீதி, கருப்பக் கவுண்டர் வீதியை சேர்ந்த பொதுமக்கள் கபசர குடிநீரை வாங்கி பயன்பெற்றனர்.நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட செயலாளர்கள் கண்மணி பாபு, மோகனா அதிமுக பகுதி கழகச் செயலாளர் கணேஷ், ஊடகப்பிரிவு மாநில செயலாளர் சபரி கிரீஸ், முன்னாள் கவுன்சிலர் கீதா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.