March 16, 2018
தண்டோரா குழு
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் பண்ணை தொழிலாளர்கள் பணி நிரந்தரம்,ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் 1000க்கும் மேற்பட்ட பண்ணை தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இவர்கள் பணி நிரந்தரம்,வாரத்தில் 5 நாள் வேலை, பி.எப்.வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பண்ணை தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என தொடர்ந்து அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் பண்ணை தொழிலாளர்களின் கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் வேளாண் பல்கலை கழக வளாகத்தில் பண்ணை தொழிலாளர்கள் இன்று பணிகளை புறக்கணித்து ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.மேலும்,பல்கலை கழக வளாகத்தில் உள்ளே போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். பண்ணைதொழிலாளர்கள் போராட்டம் காரணமாக பல்கலைகழக வளாகத்தில் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசும், பல்கலைகழக நிர்வாகமும் தங்கள் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இல்லையெனில் தொடர் போராட்டங்களில் ஈடுபட இருப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பண்ணை தொழிலாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.