February 20, 2018
தண்டோரா குழு
கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேளாண் புத்தங்களுடன் புத்தக கண்காட்சி இன்று(பிப் 20)தொடங்கியது.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பாக இரண்டு நாட்கள் புத்தக கண்காட்சி இன்று தொடங்கியது.இந்த புத்தக கண்காட்சியினை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் டி. சுதாகர் திறந்து வைத்தார்.
அதன் பின் அவர் பேசுகையில்,
“இந்த புத்தக கண்காட்சியினாது வருடா வருடம் நடைபெறும். இந்த வருடம் மாணவர்களுக்கு தேவைப்படும் விதமாக அறிவியல் சார்ந்த நிறைய புத்தகங்கள் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. மேலும் பல்கலைக்கழக நூலகத்திற்கு தேவையான புத்தகங்களை தேர்வு செய்து அதை வாங்கவும் திட்டமிட்டுள்ளோம். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள்,ஆசிரியர்கள் இக்கண்காட்சியினை காண வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது,” என்றார்.