February 5, 2018
தண்டோரா குழு
கோவையில் குளங்களை பாதுகாக்கும் விதமாக குளக்கரைகளில் மியாவாக்கி முறையில் அடர்வனம் உருவாக்கும் முயற்சியில் இயற்கை ஆர்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் விதமாக பல்வேறு அமைப்புகள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் பல்வேறு திட்டப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் கோவையில் குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் கோவையை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள குளங்களை பாதுகாக்கும் விதமாக பல்வேறு களப்பணிகளை செய்து வருகின்றனர்.
இதில் ஒரு பகுதியாக கோவையை அடுத்த,வெள்ளலூர் குளக்கரையில் மியாவாக்கி முறையில் அடர்வனம் உருவாக்கும் திட்டத்திற்கான துவக்க விழா இன்று(பிப் 5) நடைபெற்றது.இதில் சிறிய அளவிலான இடத்தில் அதிக மரங்களை நட்டு வளர்க்கும் மியாவாக்கி முறையில் மரங்கள் நடப்பட்டன.
இவ்விழாவில் இயற்கை ஆர்வலர் அன்பரசன் கலந்து கொண்டு மரங்களை நட்டு விழாவை துவக்கி வைத்தார்.மியாவாக்கி் முறையில் பலவகையான மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்படும் எனவும் இதன் மூலம் இந்த அடர்வனங்கள் பலவகை இன பறவைகள் இந்த இடத்திற்கு வர ஏதுவாக அமையும் எனவும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் தெரிவித்தனர்.