February 27, 2020
தண்டோரா குழு
கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை அனைக்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட 900 டன் குப்பை சேகரிக்கப்பட்டு தரம் பிரித்து மறு சுழற்சி செய்யப்படுகிறது. மேலும் தேக்கி வைக்கபட்டு உள்ள குப்பைகள் தரம் பிரிக்க வைக்கபட்டு உள்ளன. தேக்கி வைக்கபட்டு உள்ள குப்பைகள் மலை போல் குவிக்க வைக்கபட்டு உள்ளதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாகவும் இதனை வேறு இடத்திற்கு மாற்ற அப்பகுதி மக்கள் தொடர் கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று வெள்ளலூர் குப்பை கிடங்கில் தீ பற்றியதை தொடர்ந்து அப்பகுதி முழுவதும் புகை மூட்டத்துடன் காணப்பட்டது. இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கபட்டதை தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.