• Download mobile app
25 Jul 2025, FridayEdition - 3453
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை வி.ஜி.எம் மருத்துவமனையில் அதிநவீன கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தளம் துவக்கம்

July 24, 2025 தண்டோரா குழு

இந்தியா முழுவதும் மெடபாலிக் சிண்ட்ரோம் மற்றும் கொழுப்பு கல்லீரல் நோய்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இதற்கான முக்கியமான காரணிகள் அதிக சத்து உணவு, உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய் ஆகும்.நெருப்பில் எண்ணெய் ஊற்றும் வகையில், மதுபானத்தின் காரணமான கல்லீரல் நோய்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

கோயம்புத்தூரில் ஹெபடைடிஸ் B மற்றும் C மஞ்சள் காமாலை நோய்களின் பரவல் குறைவாக இருந்தாலும், அண்டை கிராமமான அன்னூரில்,இவை இந்தியாவிலேயே அதிகமாகக் காணப்படுவதுடன், நோயாளிகள் நோயின் உணர்வின்றி, தொடர்ந்து வருடக் கணக்காக கல்லீரல் பாதிக்கப்பட்டு சிரோசிஸ் மற்றும் கல்லீரல் புற்று நோயாளியாக மாறுகிறார்கள்.இதன் விளைவாக சுருங்கிய கல்லீரல், சிறுநீரக கோளாறுகள் மற்றும் கல்லீரல் புற்றுநோய் போன்ற கடுமையான நிலைகள் உருவாகின்றன.

இந்த நிலையில்,கோயம்புத்தூரில் உள்ள வி.ஜி.எம் மருத்துவமனை அதன் தனி ‘லிவர் பிளாக்கில்’, உலக தரம் வாய்ந்த கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை கூடத்தை உருவாக்கியுள்ளது. இந்த புதிய நிலையம் இன்று விர்ஜீனியா காமன்வெல்த் பல்கலைக்கழகத்திலிருந்து வருகை தந்த பேராசிரியர் டாக்டர் அருண் சன்யால் அவர்களால் திறக்கப்பட்டது.

இந்தியாவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிலை :

•இந்தியாவில் கல்லீரல் நோயால் பாதிக்கப்படும் மக்கள் இரண்டரை முதல் மூன்று கோடி வரை.

•ஆண்டுதோறும் 50,000க்கும் மேற்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் தேவைப்படுகிறது.ஆனால், தற்போது 3,500 முதல் 4,000 மாற்றுகள் மட்டுமே நடைபெறுகின்றன.

•இந்தியாவில் உள்ள மாற்று மையங்கள் 100க்கும் குறைவாகவே உள்ளன – பெரும்பாலும் பெரிய நகரங்களில் மட்டுமே உள்ளன.இது தேவை மற்றும் கிடைக்கும் சேவை இடையிலான பெரும் பற்றாக்குறையை காட்டுகிறது.

வி.ஜி.எம் மருத்துவமனை – தொலைநோக்குடன் கட்டப்பட்டு, மக்கள் சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்டது

இந்த புதிய நிலையம் மாடுலார் ஆப்பரேஷன் தியேட்டர்கள், HEPA வடிகட்டும் காற்றோட்டங்கள், சிறப்பு ICU பிரிவுகள், மற்றும் பல்துறை நிபுணர்கள் கொண்ட குழுமம் என உலகத் தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இது உயிருள்ள உறுப்பு கொடையாளர் மற்றும் உயிரிழந்த உறுப்பு கொடையாளர் மூலம் கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று சிகிச்சை அளிக்கும் திறன் கொண்டது.

பேராசிரியர் டாக்டர் அருண் சன்யால் பேசுகையில்,

“இந்தியா இன்று கல்லீரல் நோய்களில் ஒரு திருப்புமுனையில் உள்ளது.வி.ஜி.எம் மருத்துவமனை போன்ற நிறுவனங்கள் மக்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் முக்கிய பங்காற்றுகின்றன.” என்று தெரிவித்தார்.

டாக்டர் வி.ஜி. மோகன் பிரசாத், தலைவர் மற்றும் முதன்மை வயிற்று நோய் நிபுணர் பேசுகையில்,

“இது வெறும் அறுவை சிகிச்சை கூடம் அல்ல. இது ஒரு தொலைநோக்குடன் உருவாக்கப்பட்ட தளம் . மலிவான செலவில் உலக தரம்சேர்ந்த பராமரிப்பு, ஆய்வு, பயிற்சி மற்றும் ஆரம்ப கட்ட நோய் கண்டறிதல் ஆகியவற்றைக் கொண்டது.” பெரும்பாலான மாற்று மையங்கள் மெட்ரோ நகரங்களில் உள்ளன. வி.ஜி.எம் மருத்துவமனை, தமிழ்நாடு மற்றும் அதன் அருகிலுள்ள மாநிலங்களைச் சேர்ந்த மக்களுக்கு இந்த முக்கிய சிகிச்சையை வழங்கும் மையமாக இருக்கும், என்று தெரிவித்தார்.

வி.ஜி.எம் மருத்துவமனையின் எண்டோஸ்கோபி துறையின் இயக்குனர்கள் டாக்டர் மதுரா பிரசாத், டாக்டர் வம்சி மூர்த்தி, ஹெப்பாட்டோலாஜி துறை சிறப்பு நிபுணர் டாக்டர் மித்ரா மற்றும் ஆர்த்தோ அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க