• Download mobile app
05 Feb 2026, ThursdayEdition - 3648
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை விழாவை சிறப்பிக்க காத்திருக்கும் விசைப்படகுகள்

January 3, 2020

கோவை மாவட்டம் முழுவதும் ஸ்மார்ட் சிட்டியாக மாறி வரும் நிலையில் இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அரசும் பல நிறுவனங்களும் நடத்தி வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக குளங்களை மீட்டெடுக்கவும் நீர்நிலைகளை பாதுகாக்கவும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிபிடிஎஸ் என்ற நிறுவனம் கோவை குறிச்சி குளத்தில் விசைப்படகு போட்டிகளை நடத்த தயாராகி வருகின்றன. கோவை விழாவிற்காக நடத்தப்படும் இந்த விசைப்படகு போட்டியானது நாளை மற்றும் நாளை மறுநாள் இரு தினங்களும் நடத்தப்படுகின்றன.

இதை பி பி டி எஸ் நிறுவனம் இந்திய கப்பல் படையின் உதவியோடு நடத்துகிறது. இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் தற்போது கோவை குறிச்சி குளத்தில் நடைபெற்று வருகிறது இந்த ஏற்பாடுகள் மற்றும் பயிற்சிகளை காணவே மக்கள் பலரும் ஆர்வமுடன் ரசித்து வருகின்றனர்.

இந்த படகுகள் காற்றில் மட்டுமே செல்லும் படகுகள் ஆகும். காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தவும் நீர் நிலைகளை தூய்மையாக வைத்துக்கொள்ள இம்மாதிரியான இயற்கைக் காற்றில் செல்லும் இந்தப் படகுப் போட்டி நடைபெற உள்ளது.

மேலும் படிக்க