• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற மாரத்தான் போட்டி

January 8, 2023 தண்டோரா குழு

கோவை விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற மாரத்தான் போட்டியில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், மாநகர காவல் ஆணையாளர் ஆகியோர் பங்கேற்றனர்.

கோவை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தனியார் அமைப்புகளின் பங்களிப்புடன் கோவை விழா நடைபெற்று வருகிறது.கோவை விழா கடந்த 4ம் தேதி துவங்கி இன்றுடன் முடிவடைகிறது. இதுவரை நடைபெற்ற கோவை விழாவில் பல்வேறு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

குழந்தைகள் முதல் பெரியவர்கள், மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் மேற்கொண்டனர்.கோவை விழாவின் நிறைவு நாளான இன்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் நடைபெற உள்ளது. அதன் ஒரு பகுதியாக நேரு விளையாட்டு அரங்கம் அருகில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் ஐந்து வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்த மாரத்தான் போட்டி 2.5 கிமீ, 5கிமீ, 10கிமீ என நடைபெற்றது.இதில் பத்து கிலோமீட்டர் பிரிவில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உட்பட காவல்துறையினர் பலரும் பங்கேற்றனர். மாரத்தான் போட்டியில் மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையாளர் மாநகர காவல் ஆணையாளர் ஆகியோர் பங்கேற்றது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மாரத்தான் போட்டிகள் பங்கேற்ற பலரும் அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.

மேலும் படிக்க