கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள கோ- இந்தியா அலுவலகத்தில் கோவையில் உள்ள தொழில் முனைவோர் மற்றும் தொழில் அமைப்புகளுடன் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆகியோர் கலந்துரையாடினர்.
அதன் பின்னர் இருவரும் கூட்டாக நிருபர்களிடம் பேட்டி அளித்தனர்.
அதில் ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறியதாவது:
2006 -11 ம் ஆண்டு திமுக ஆட்சியில் ஆசியாவிலேயே மிகப்பெரிய தொழில் கூட்டுறவு தொழில் பேட்டை 316 ஏக்கரில் அமைக்க கோவை மாவட்டம் கிட்டாம்பாளையம், திருப்பூர் மாவட்டம் தெக்கலூர் ஆகிய பகுதியில் இடம் கையகப்படுத்தப்பட்டு, 555 மனைகளாக பிரிக்கப்பட்டு தொழில் முனைவோர்களுக்கு அந்த இடங்கள் வழங்கப்பட்டது.
அதன் பிறகு ஆட்சிக்கு வந்த அதிமுக வினர் அந்தத் திட்டம் திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் என்பதால் அதை கைவிட்டு முடக்கினர். இன்று நாங்கள் அதை ஆய்வு செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளோம். மேலும் அங்கு ரூ 18 கோடியில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. 316 ஏக்கரிலும் தொழிற்சாலைகள் உருவாக்கி ஆசியாவிலேயே மிகப்பெரிய தொழில் பேட்டையை முதலமைச்சரின் ஆணைக்கு இணங்க உருவாக்க இருக்கிறோம். இந்த தொழில் பேட்டை அமைந்தால் 50 ஆயிரம் பேர் வரை நேரடியாகவும் மறைமுகமாகவும் பலன் அடைவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதைத் தொடர்ந்து தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் உள்ள தொழில்முனைவோர்களிடம் தொழிற்சாலைகள் இருக்கக்கூடிய பல்வேறு பிரச்சினைகளை குறித்து நேரில் அறிந்து கொள்வதற்கும் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது.
தொழில் முனைவோரின் குறைகளை கேட்டறிந்து இருக்கின்றோம். தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த தொழில் வளர்ச்சிக்கு புதிய உத்வேகத்தை மு க ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு அழைத்து வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆட்சிப் பொறுப்பேற்ற குறுகிய காலத்தில் 17 ஆயிரம் கோடிக்கு மேலாக புதிய தொழில் முதலீடுகள் ஈர்த்து 56,000 பேருக்கு புதிய வேலை வாய்ப்பை ஏற்படுத்தி இந்த அரசு புயல் வேகத்தில் செயல்பட்டு கொண்டிருக்கிறது.
கோவை உள்ளிட்ட தொழில் நகரங்களில் கொரொனாவால் ஏற்றுமதி பாதிக்காமல் இருக்க தொடர்ந்து இயங்குவதற்கு இந்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கோவையில் தொழில் வளர்ச்சியை உறுதி செய்வதற்கும், மேம்படுத்துவதற்கும் முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க பல இடங்களில் ஆய்வு செய்தோம்.
இன்று கோவையில் துவங்கிய அமேசான் நிறுவன மைத்தினால் 2,000 பேருக்கு வேலை வாயப்பு ஏற்பட்டுள்ளது.புதிய தொழில், வேலை வாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். கோவையில் புதிய தொழில் பூங்கா அமைப்பது குறித்த திட்டம் உள்ளது. தொழில்பூங்கா குறித்த திட்டம் விரைவில் முதல்வர் அறிவிப்பார்.
கோவையில் பவுண்டரி தொழில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அதன் தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்வதற்காக சென்ற் பார் எக்ஸலண்ட் என்ற மையம் அமைக்க வேண்டும் என்று தொழில்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.தொழில் துறையினர் பல்வேறு பிரச்சினைகளை சொல்லி இருக்கின்றனர்.அது குறித்து சென்னை சென்று முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.
கோவையில் புதிய தொழில் வாய்ப்புகள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். தொழில் ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக விமான நிலையம் மற்றும் துறைமுகம் ஆகியவை செயல்பட்டு வருகிறது. கோவை விமான நிலைய விரிவாக்க பணிகளை பொருத்தவரை அரசு நிச்சயமாக முனைப்போடு செயல்படும் விரைந்து முடிக்கப்படும் என்றார்.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது