April 6, 2018
தண்டோரா குழு
கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் நிலையில்,விவசாய நிலங்களில் உள்ள தென்னை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என ஆட்சியரிடம் கட்சிசார்பற்ற விவசாயிகள் மனு அளித்தனர்
கோவை சர்வதேச விமான நிலைய விரிவாக்கத்திற்காக தொடர்ந்து நிலம் கையெப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் விவசாய நிலத்தை கையகப்படுத்தும் போது அதில் உள்ள தென்னை மரங்களுக்கு உரிய விலை தரவில்லை என விவசாயிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.குறிப்பாக விமான நிலையத்தின் அருகே செழிப்பாக உள்ளதால் தென்னை மரங்களில் இருந்து வருடத்திற்கு 200 தேங்காய் வரை கிடைப்பதால் அதிக லாபம் ஈட்டி வந்ததாகவும், இந்நிலையில் தற்போது அந்த நிலத்தை குறைந்த விலைக்கு கேட்பதாக தெரிவித்துள்ளனர்.
எனவே ஒவ்வொரு தென்னை மரத்திற்கும் 50 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கட்சிசார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மேலும்,தங்களது கோரிக்கையை உடனடியாக ஏற்று சுமூக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்