• Download mobile app
18 Aug 2025, MondayEdition - 3477
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை விமான நிலையம் விரிவாக்கம் 628 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு விரைவில் பணி – ஆட்சியர் தகவல்

August 24, 2021 தண்டோரா குழு

கோவை சர்வதேச விமான நிலைய அலுவலக கூட்டரங்கில் பன்னாட்டு விமானநிலைய ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் சமீரன் முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:

கோவை விமான நிலையம் விரிவாக்க பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தும் பணி 24 கட்டங்களாக பிரிக்கப்பட்டு ஏறத்தாழ 628 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு விரைவில் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கான இழப்பீடு தொகையாக இதுவரை ரூ.29 கோடி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.1390 கோடி நிதி போர்க்கால அடிப்படையில் பெற்று வழங்கப்பட உள்ளது.

தொழிற் நிறுவனங்கள் மற்றும் பொது மக்களிடம் கருத்துகள் கேட்டு ஒரு நல்ல மாதிரியான விமான நிலையமாக உருவாக்கப்படும்.
பறவைகளின் தொல்லை நிரந்தரமாக நீக்க விமானநிலையம் மற்றும் அதன் அருகில் உள்ள இடங்களில் உள்ள கழிவுப்பொருள்கள் கொட்டுவது மாற்றி வேறு இடத்திற்கு மாற்றி அமைக்கப்படும். வெளிநாட்டு வர்த்தகங்களை மேம்படுத்த தொழில் முனைவோர்களுடன் இணைந்து, கூடுதல் வெளிநாட்டு விமானங்கள் இயக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மாநகர பேருந்து நிலையத்திலிருந்து விமானநிலையத்திற்கு ஒரு மணி நேர இடைவெளியில் பேருந்துகளை இயக்க வேண்டும். மேலும் பயணிகள் நிழற்குடைகளை விமான நிலையத்திற்கு அருகில் அமைக்க வேண்டும்.மாநகரப் பகுதிகளிலிருந்து விமானநிலையத்திற்கான வழித்தடங்களில் போக்குவரத்துகளை முறையாக கண்காணிக்க வேண்டும்.

மேலும் பழுதடைந்துள்ள சர்வீஸ் சாலைகளை சீரமைக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பன்னாட்டு விமானநிலைய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் குறித்தும், பணிகளை விரைந்து முடிக்கவும் பல்வேறு ஆலோசனைகளை இக்கூட்டத்தில் வழங்கினார்.

இந்நிகழ்வில் மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா, மாநகர போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமி, பன்னாட்டு விமான நிலைய இயக்குநர் செந்தில்வளவன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க