• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை விமான நிலையம் குறித்தான ஆலோசனை கூட்டம்

March 9, 2022 தண்டோரா குழு

கோவை விமான நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் விமான நிலையம் குறித்தான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் கோவை விமான நிலைய இயக்குநர், செந்தில்வளவன்,கோவை எம்பி பி.ஆர்.நடராஜன்,கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார், மாநகராட்சி ஆணையர் ராஜ கோபால் சுன்கரா, வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், துணை காவல் ஆணையர் உமா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும், அதை அமல்படுத்துவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டது.மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் விமான நிலைய விரிவாக்கம், விமான நிலைய பயணிகளுக்கான வசதிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் விமான நிலையத்தில் வாகனங்கள் நிறுத்த அதிக கட்டணம் வசூலிப்பதால் கோவை விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் அவதிப்படுகின்றனர் என வெளியாகியுள்ள செய்தியை பாராளுமன்ற உறுப்பினர் பிஆர் நடராஜன் விமான நிலைய இயக்குனரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என இயக்குநர் கூறினார்.

மேலும் விமான நிலைய இயக்குனர் இந்த கூட்டத்தில் தற்போது விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் செயல்பாடுகள் குறித்தும் விமான நிலையத்தில் உள்ள வசதிகள் குறித்தும் இனி மேற்கொள்ளப்பட உள்ள வசதிகள் ஆகியவற்றை குறித்து விளக்கம் அளித்தார்.

மேலும் படிக்க