• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை விமான நிலையத்தை முற்றிக்கையிட முயன்ற மஜகவினர் கைது

December 6, 2018 தண்டோரா குழு

1992 டிசம்பர் 6 அன்று பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டு 27 ஆண்டுகள் தொடர்ந்து கோவையில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் விமான நிலைய முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

பாபர் மஸ்ஜித் வழக்கில் சட்டத்தின் அடிப்படையில் விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை முன்னிறுத்தி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில மாநிலங்கள் உள்பட 7 விமான நிலையங்களை முற்றுகை போராட்டம் இன்று நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக கோவை விமான நிலையம் அருகே மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது மற்றும் மாநில துணை பொதுச்செயலாளர் ஏகே சுல்தான் அமீர் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் நிவாகிகள் மற்றும் பெண்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 450 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் படிக்க