• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை விமான நிலையத்தில் முன்னாள் தூத்துக்குடி திமுக எம்.பி. பிஸ்டல் கொண்டு வந்ததால் தடுத்து நிறுத்தம்

November 19, 2018 தண்டோரா குழு

சென்னை செல்வதற்காக நேற்று நள்ளிரவு கோவை விமான நிலையம் வந்த முன்னாள் தூத்துக்குடி திமுக எம்.பி ஜெயதுரை சூட்கேசில் 5 தோட்டாக்களுடன்,பிஸ்டல் கொண்டு வந்ததால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

கோவையிலிருந்து சென்னை செல்வதற்காக விமான நிலையம் வந்த முன்னாள் திமுக எம்.பி. எஸ்.ஆர்.ஜெயதுரையை வழக்கமாக அதிகாரிகள் சோதனை செய்தனர்.அப்போது அவர் கொண்டு வந்த சூட்கேசில் 5 தோட்டாக்களுடன்,பிஸ்டல் கொண்டு வந்ததால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

இதையடுத்து விமான விதிப்படி இவற்றை எடுத்துச் செல்ல முடியாது என்று அதிகாரிகள் கூறி விட்டனர்.மேலும் ஆயுதம் கொண்டு வருவது தொடர்பாக முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை என்றும் கூறி அவற்றைப் பறிமுதல் செய்தனர்.

இதனால் கோபமடைந்த ஜெயதுரை,அவர்களுடன் வாக்குவாதத்ததில் ஈடுபட்டார்.தான் உரிமம் பெற்றே துப்பாக்கி வைத்துள்ளதாக கூறிய அவர் தன்னுடன் அதை எடுத்துச் செல்ல அனுமதிக்குமாறும் கூறினார்.ஆனால் அதிகாரிகள் பிடிவாதமாக முடியாது என்று கூறி விட்டனர்

இதையடுத்து அந்தத் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை தனது உறவினர் ஒருவரிடம் வாங்கி ஒப்படைத்தார் ஜெயதுரை.இதையடுத்து அதிகாரிகள் அவரை மதுரைக்குக் கிளம்ப அனுமதித்தனர்.இச்சம்பவம் குறித்து பீளமேடு காவல் துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.

மேலும் படிக்க