• Download mobile app
13 Aug 2025, WednesdayEdition - 3472
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை விமான நிலையத்தில் துப்பாக்கியுடன் வந்த காங்கிரஸ் பிரமுகரிடம் அதிகாரிகள் விசாரணை

January 4, 2022 தண்டோரா குழு

கோவை விமான நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி துப்பாக்கி எடுத்துவந்த கேரள மாநில காங்கிரஸ் பிரமுகரிடம் விமான நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கேரள காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும் பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி முனிசிபல் முன்னாள் சேர்மனாகவும் இருந்த கே‌.எஸ்.பி.ஏ தங்கல் பெங்களூரு வழியாக அமிர்தரஸ் செல்ல கோவை விமானம் நிலையம் வந்துள்ளார். வழக்கமான உடமைகளை பரிசோதித்தபோது ஏழு ரவுண்டு புல்லட்டுகளுடன் ஒரு துப்பாக்கி பிடிபட்டது.

துப்பாக்கி மற்றும் புல்லட்டுகளை எடுத்துச் செல்ல அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க