January 21, 2020
தண்டோரா குழு
குடியரசு தினத்தை முன்னிட்டு விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கோவை விமான நிலையத்திற்கு ஐந்து அடுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஜனவரி 26ம் தேதி குடியரசு
தினத்தை முன்னிட்டு நேற்று முதல் ஜனவரி 30 வரைக்கும் இந்த பாதுகாப்பு இருப்பதாக விமான நிலைய இயக்குனர் மகாலிங்கம் தெரிவித்தார். விமான நிலைய வளாகம் மற்றும் ஓடுபாதைகளில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரா்களும், வெளிப் பகுதியில் போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். விமான நிலையம் வளாகத்திற்குள் பார்வையாளர்களுக்கு (பயணிகளின் உறவினர்கள்) 10 நாட்களுக்கு அனுமதி மறுப்பு. மேலும் விமான நிலையத்தை சுற்றியுள்ள அனைத்து பகுதியிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் விமான நிலையத்துக்குள் வரும் அனைத்து வாகனங்களையும் பரிசோதனை செய்த பின்பே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். மற்றும் மோப்ப நாய் சோதனையில் பங்கு உள்ளது. 24 மணி நேரமும் இந்த சோதனை அது தொடரும். பாதுகாப்பு பணியில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மத்திய மாநில போலீசார் ஈடுபட்டுள்ளனர். கூடுதலாக கோவை மாநகர போலிசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்