• Download mobile app
15 Aug 2025, FridayEdition - 3474
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை வழியாக சபரிமலைக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

December 14, 2021 தண்டோரா குழு

கோவை வழித்தடத்தில் வருகின்ற 18 ஆம் தேதி முதல் சபரிமலைக்கு கூடுதலாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சபரிமலை சீசனையொட்டி, பக்தர்களின் வசதிக்காக சேலம், கோவை வழித்தடத்தில் வருகின்ற 18 ஆம் தேதி முதல் மேலும், கூடுதலாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.செஹந்திராபாத் – கொல்லம் சிறப்பு ரயில்: செஹந்தராபாத்தில் வருகின்ற 18 ஆம் தேதி காலை 5.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்( எண்: 07133) மறுநாள் பிற்பகல் 1.50 மணிக்கு கொல்லம் ரயில்நிலையத்தைச் சென்றடையும். கொல்லத்தில் இருந்து 19 ஆம் தேதி இரவு 7.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்( எண்: 07134) 21ஆம் தேதி காலை 3.30 மணிக்கு செஹந்திராபாத் நிலையத்தை சென்றடையும்.

காச்சிகுடா – கொல்லம் சிறப்பு ரயில்:

தெலங்கானா மாநிலம் காச்சிகுடா நிலையத்தில் இருந்து டிசம்பர் 22 ஆம் தேதி காலை 5.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்(எண்: 07135) மறுநாள் பிற்பகல் 1.50 மணிக்கு கொல்லம் நிலையத்தைச் சென்றடையும். கொல்லத்தில் இருந்து 23 ஆம் தேதி இரவு 7.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்(07136) 25 ஆம் தேதி காலை 3.30 மணிக்கு காச்சிகுடா நிலையத்தை சென்றடையும்.

நண்டேடு – கொல்லம் சிறப்பு ரயில்:

மஹாராஷ்டிரா மாநிலம், நண்டேடு நிலையத்தில் இருந்து வருகின்ற 23 ஆம் தேதி, காலை 9.45 மணிக்கு நண்டேடு நிலையத்தில் புறப்படும் சிறப்பு ரயில்( எண்: 07137) மறுநாள் இரவு 7.40 மணிக்கு கொல்லம் நிலையத்தைச் சென்றடையும்.

ஹைதராபாத் – கொல்லம் சிறப்பு ரயில்:

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து டிசம்பர் 21 ஆம் தேதி பிற்பகல் 2.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்( எண்: 07117) மறுநாள் இரவு 9.40 மணிக்கு கொல்லம் நிலையத்தை சென்றடையும். கொல்லத்தில் இருந்து 23 ஆம் தேதி இரவு 2.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்( எண்:07118) 25 ஆம் தேதி காலை 8 மணிக்கு ஹைதராபாத் நிலையத்தைச் சென்றடையும்.

கொல்லம் – திருப்பதி சிறப்பு ரயில்:

டிசம்பர் 25 ஆம் தேதி இரவு கொல்லத்தில் இருந்து 12 .45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்( எண்: 07506), மறுநாள் மாலை 5.10 மணிக்கு திருப்பதியைச் சென்றடையும்.
சபரிமலை சிறப்பு ரயில்கள், காயன்குளம், மாவேளிக்கரை, செங்கனூர், திருவல்லா, சங்கனச்சேரி, கோட்டயம், எர்ணாகுளம் டவுன், திருச்சூர், பாலக்காடு, கோவை, ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க