July 21, 2021
தண்டோரா குழு
கேரள மாநிலம், கொச்சுவேலியில் இருந்து கர்நாடகம் மாநிலம், யஸ்வந்த்பூருக்கு கோவை வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சேலம் ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
யஷ்வந்த்பூரில் இருந்து ஜூலை 22 ஆம் தேதி முதல் வியாழக்கிழமைகளில் மாலை 3.20 க்கு புறப்படும் சிறப்பு ரயிலானது, மறுநாள் காலை 6.50 மணிக்கு கொச்சுவேலி நிலையத்தை சென்றடையும். இதேபோல், கொச்சுவேலியில் இருந்து ஜூலை 23 ஆம் தேதி வெள்ளிக்கிழமைகளில் நண்பகல் 12.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 4.30 மணிக்கு யஷ்வந்த்பூரைச் சென்றடையும்.
இந்த ரயில்கள் கிருஷ்ணராஜபுரம், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம் டவுன், கோட்டயம், செங்கனூர், கொல்லம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.