May 14, 2021
தண்டோரா குழு
கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் மைசூர் – கொச்சுவேலி ரயில், 15 ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பயணிகளின் வருகை மிக குறைவாக உள்ளதால், கோவை, சேலம் வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் மைசூர் – கொச்சுவேலி தினசரி சிறப்பு ரயில், மைசூர் தினசரி சிறப்பு ரயில், மே 15 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது .
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.