• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை வனத்திற்குள் அத்துமீறி நுழைந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – வன பாதுகாவலர்

March 12, 2018

கோவை மண்டலத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிக்குள் அத்துமீறி யாரும் செல்ல வேண்டாம் எனவும், சுற்றுலா பயணிகள் வனப்பகுதிக்குள் ட்ரக்கிங் செல்வதற்கும் முழுவதுமாக தடை செய்யப்பட்டு உள்ளதாகவும், அத்துமீறி நுழைந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என  கோவை மண்டல வன பாதுகாவலர் ராம சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

வன சட்டத்தின் படி பாதுகக்கப்பட்ட வனப்பகுதிக்குள் அத்துமீறி யாரும் செல்ல வேண்டாம் எனவும், கோவை மண்டல வனப்பகுதியில்  சுற்றுலா பயணிகள் வனப் பகுதிக்குள் ட்ரக்கிங் செல்வதற்கு முழுவதுமாக தடை செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறினார். குறிப்பாக அத்துமீறி வனப் பகுதியில் நுழைந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கபப்டும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.  வ

மேலும்,வனத்தில் தீ ஏற்பட்டால் புகையின் காரணமாக பாதிக்கும் நிலை ஏற்படுவதாகவும் அதனால்  மயக்க நிலை அடைந்து தீயில் சிக்குவார்கள் என குறிப்பிட்டார். இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அவர்களை அனுமதிப்பதில்லை என கூறினார்.

கோவை மண்டலத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் காட்டு தீ ஏற்படுவதை தடுக்க தீ தடுப்பு போடப்பட்டு உள்ளதாகவும் கண்காணிப்பு கோபுரம் அமைத்து தீ ஏற்படுவதை தடுக்க 30 பேர் குழு கொண்ட கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாக கூறினார்.

வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைபவர்களை கண்காணிக்கவும் தீ ஏற்படுவதை கண்காணிக்கவும் 75 வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் 40 கண்காணிப்பாளர்கள் பணியமர்த்தபட்டுள்ளதாகக் கூறினார்.

மேலும் படிக்க