• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை வனக் கோட்டத்தில் சிறுத்தை தாக்கி ஆடு,மாடு பலி பொதுமக்கள் அச்சம் ..!

February 13, 2020 தண்டோரா குழு

கோவை வனக் கோட்டத்தில் உள்ள சிறுமுகை வன சாரத்தில் சிட்டே பாளையம் திருச்சிக்காரர் பெரிய தோட்டம் என்பவரது தோட்டத்தின் சாலைக்கும் வனத்துறை கரட்டுக்கும் சுமார் 50 மீட்டர் தூரம் தான் உள்ளது. இந்நிலையில், நேற்றைக்கு முன்தினம் வனப்பகுதிக்கு மேய்வதற்கு சென்ற இவரது கன்றுகுட்டி வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சண்முகம் வனப்பகுதிக்கு சென்று கன்று குட்டியை தேடி சென்று பார்த்ததில் கன்றுக்குட்டி சிறுத்தை தாக்கி இறந்துள்ளதாக தெரியவருகிறது.

இந்நிலையில் நேற்றும் சிறுத்தை ஆட்டுக்குட்டி ஒன்றைக் தாக்கி இறந்துள்ளது .இந்த சம்பவம் தொடர்பாக சிறுமுகை வனசரக அலுவலர் மனோகரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சம்பவ இடத்தை பார்வையிட்ட விசாரணை செய்து வருகிறார்.

இதனையடுத்து, வனத்துறை ஒட்டியுள்ள கிராமத்துக்கு இரவு நேரங்களில் சிறுத்தைப்புலி நடமாட்டம் உள்ளதால் பொதுமக்களையும் குழந்தைகளளையும் கால்நடைகளையும் தாக்கி உயிர் சேதம் ஏற்படவாய்ப்புள்ளதாகவும் பொதுமக்களின் நலனைக் கருதி வனத்துறை சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க