• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை வந்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

December 4, 2020 தண்டோரா குழு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை வரவேற்க குவிந்த தொண்டர்களால் கோவை விமான நிலையத்தில் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

மத்திய வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்ப பெற கோரி டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சேலத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்த அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த திமுக தலைவர் ஸ்டாலினை காணவும், அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளவும், திமுக தொண்டர்கள் உற்சாக மிகுதியில் முந்தியடித்து கொண்டனர். இதனால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. மேலும் கொரோனா தொற்று காலத்தில் தனிமனித இடைவெளியின்றி ஒருவரை ஒருவர் முந்தியடுத்தி சென்றதால் சலசலப்பு ஏற்பட்டது. விமான நிலையத்திலிருந்து பத்திரமாக காருக்கு அழைத்து சென்றனர். பின்னர் கட்சினரை பார்த்து கையசைத்தபடியே காரில் ஏறியவர் சாலை மார்க்கமாக சேலம் புறப்பட்டு சென்றார்.

மேலும் படிக்க