• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை வடக்கு மாவட்டம் சுகுணா புரம் பகுதி தி.மு.க சார்பாக நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாம்

December 12, 2022 தண்டோரா குழு

கோவை வடக்கு மாவட்டம் சுகுணா புரம் பகுதி தி.மு.க.மற்றும் மேஜிக் பஸ் இந்தியா பவுண்டேஷன் சார்பாக நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

தி.மு.க. இளைஞ ரணிசெயலாளரும், திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப் பினருமான உதய நிதி ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆலோசனையின் பேரில் கோவை வடக்கு மாவட்டம் சுகுணா புரம் பகுதி தி.மு.க. மற்றும் மேஜிக் பஸ் இந்தியா பவுண்டேஷன் ஆகியவை சார்பில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் கோவைப்புதூர் அருகே குளத்துப்பாளையம் அரசுமேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

கோவை மாநகராட்சி 91-வது வார்டு மாமன்ற உறுப்பினரும்,நியமனகுழு உறுப்பினருமான சுகுணாபுரம் பகுதி தி.மு.க. செயலாளர் மு. ராஜேந்திரன் ஏற்பாட்டில் நடைபெற்ற முகாம் துவக்க விழாவில்,கோவை வடக்கு மாவட்டதி.மு.க. செயலாளர் டி.ஏ.ரவி துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில், குனியமுத்தூர் பகுதி செயலாளர் லோகு மற்றும் திமுக மாவட்ட நிர்வாகிகள் தணிகை ராஜேந்திரன் மாமன்ற உறுப்பினர் சோமு மற்றும் பகுதி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இம்முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள் காப்பீடு,மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இருந்து 30 க்கும் மேற்பட்ட முன்னணி வேலையளிக்கும் நிறுவனங்கள் காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களைத் தேர்வு செய்தனர். முகாமில், 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் தொழிற் பயிற்சி, டிப்ளமோ, கலை அறி வியல் படிப்புகள், பொறியியல் படித்த மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.

காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்ற இதில் கோவை மட்டுமின்றி அதன் சுற்றுப்புற பகுதிகளான கிணத்துகடவு, பொள்ளாச்சி,சூலூர் என பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

மேலும் படிக்க