• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை வடக்கு, சிங்காநல்லூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகளில் புதிய திட்டங்களுக்கான பூமி பூஜை

February 20, 2021 தண்டோரா குழு

கோவை வடக்கு, சிங்காநல்லூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகளில்அமைச்சர் எஸ்.பி வேலுமணி அடிக்கல் நாட்டினார்.

கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கணபதி பகுதியில் தனியார் மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட 41, 44, 46 மற்றும் 47 வார்டு பகுதிகளில் ரூ.4 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் தார்தளம் அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி புதிய திட்டங்களுக்கான பணிகளுக்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.

அதே போல் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மற்றும் மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட விவேகானந்தா நகர், லட்சுமணன் நகர், அன்னை இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் ரூ.1 கோடியே 99 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் சாலைகளுக்கு மறுதார்தளம் அமைக்கும் பணிகள், தொண்டாமுத்தூர் தொகுதி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட 76, 77, 78, 79 மற்றும் 86 ஆகிய பகுதிகளில் ரூ.12
கோடியே 61 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டிலும், வார்டு 87 முதல் 93 வரை உள்ள பகுதிகளில் ரூ.32 கோடியே 52 லட்சம் மதிப்பிலும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு அமைச்சர் எஸ்.பி வேலுமணி அடிக்கல் நாட்டினார்.

அதனைத் தொடர்ந்து தெற்கு மண்டலத்திற்குட்பட்ட 100வது வார்டு அண்ணாபுரம், மூரண்டம்மன் கோவில் வளாகம் அருகில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கும் விழா நடைபெற்றது. முன்னதாக பொள்ளாச்சி மெயின் ரோடு சுந்தராபுரம் சிக்னல் ஜங்சன் முதல் ஈச்சனாரி கோவில் பாலம் வரை ரூ.89.50 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்ட தெருவிளக்குகளை அமைச்சர் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ராஜாமணி, மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன், எம்.எல்.ஏக்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுணன், மாநகராட்சி துணை கமிஷனர் மதுராந்தகி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க