March 12, 2021
தண்டோரா குழு
கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியில் இந்து மக்கள் கட்சி சார்பாக போட்டியிட உள்ள வேட்பாளர் மந்திராச்சலம் வடக்கு சட்டமன்ற , தேர்தல் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் பணிகள் சூடு பிடித்துள்ள நிலையில்,முன்னணி கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.இந்நிலையில் இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பாக அக்கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தங்களது கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்து வேட்பாளர்களையும் அறிமுகம் செய்திருந்தார்.
இந்த நிலையில் இன்று வேட்பு மனு தாக்கல் துவங்கிய நிலையில் இந்து மக்கள் கட்சியின் வடக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மந்திராச்சலம் கோவை மாவட்டத்தின் முதல் வேட்பாளர் மனு தாக்கல் பதிவு செய்தார்.
கோவை அரசு தொழில் நுட்ப கல்லூரி அருகில் உள்ள வடக்கு சட்டமன்ற தேர்தல் அலுவலகம் வந்த அவர்,வடக்கு சட்டமன்ற தேர்தல் அலுவலர் முருகேசனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.அவரது வேட்பு மனுவை ஆய்வு செய்த அதிகாரிகள் அவரது மனுவை ஏற்று கொண்டனர்.