• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை வஉசி மைதானத்தில் போராட்டக்காரர்கள் பூந்து விடாமல் இருக்க இரும்பு தடுப்புகளை வைத்து அடைத்த போலீசார்

February 17, 2020 தண்டோரா குழு

போராட்டக்காரர்கள் புகுந்து விடாமல் தடுக்க கோவை வ உ சி மைதானம் அடைக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக் கோரி தமிழகத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் போலீஸ் தடியடி நடைபெற்றது அதை கண்டித்து போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளது.

இந்த நிலையில் கோவை வஉசி மைதானத்தில் போராட்டக்காரர்கள் பூந்து விடாமல் தடுக்கும் வகையில் மைதான நுழைவாயிலில் இரும்பு தடுப்புகளை வைத்து போலீசார் அடைத்துள்ளனர். அங்கு 24 மணி நேரமும் பாதுகாப்புக்காக ஆயுதப்படை போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் வஉசி மைதானம் வெறிச்சோடி காணப்படுகிறது.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி கூறும்போது,

மறு அறிவிப்பு வரும் வரை வஉசி மைதானம் அடைக்கப்பட்டு இருக்கும் நிலைமை சீரானதும் மைதானத்துக்குள் செல்ல பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.

மேலும் படிக்க