August 23, 2021
தண்டோரா குழு
தமிழகத்தில் தளர்வுகளுடனான ஊரடங்கு வரும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவையில் உள்ள உயிரியல், தாவரவியல் பூங்காகள் , நீச்சல் குளங்கள், திரையரங்குகள் ஆகியவை திறக்கப்படுகிறது.
கோவையின் முக்கிய பொழுதுபோக்கு தளமாக உள்ள வாஉசி உயிரியல் பூங்காவில் பல்வேறு வகை பறவைகள் உயிரினங்கள் ஊர்வன மற்றும் மீன் அருங்காட்சியகங்கள் அமைந்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 15 மாதங்களாக பூங்காவிற்கு பொதுமக்கள் வர அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது தளர்வுகள் கொடுக்கப்பட்டு இன்று முதல் பூங்காக்கள் வர பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுவதால் கடந்த இரண்டு தினங்களாக பூங்காவில் பராமரிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.மேலும் இன்று உயிரியல் பூங்காவிற்கு வரும் பொதுமக்கள் கட்டாயமாக அணிய வேண்டும்.தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும், நீண்ட நேரம் கூட்டமாக ஒரே இடத்தில் இருக்கக்கூடாது உள்ளிட்ட விதிமுறைகள் போடப்பட்டுள்ளது.
அதேபோல் உயிரியல் பூங்காவிற்குள் வருவோர் கட்டாயமாக கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தப்படுத்தி பின்னரே உள்ளே வர வேண்டும் மேலும் மாவட்டத்தில் கருணை பாதிப்பு குறைந்தாலும் இன்னும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.