February 10, 2021
தண்டோரா குழு
கோவை – லோக்மான்யா திலக் சிறப்பு ரயில் வரும் 12ம் தேதி முதல் 24ம் தேதி வரை 8 நாள்களுக்கு, மாற்று வழியில் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது:
கர்நாடக மாநிலம் ஏலஹங்கா – தர்மாபுரம் இடையே பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், கோவை – லோக்மானியா திலக் இடையே இயக்கப்படும் தினசரி சிறப்பு ரயில் வரும் 12 முதல் 15ம் தேதி வரை மற்றும் 17,18,23,24 ஆகிய 8 தினங்களில் சேலம், ஜோலார்பேட்டை, ரேனிகுண்டா, குண்டக்கல் வழியாக மாற்றி இயக்கப்படுகிறது. இதன் காரணமாக குறிப்பிட்ட 8 நாள்களிலும் தருமபுரி, ஒசூர், பெங்களூரு, ஹிந்துபூர், ஸ்ரீ சத்யசாய் பிரசாந்தி நிலையம், தர்மாபுரம், அனந்தபூர் ஆகிய நிலையங்களுக்கு செல்வதை பயணிகள் தவிர்க்கவும்.
இவ்வாறு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.