February 20, 2018
தண்டோரா குழு
கோவையில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு அருகே நிறுத்து வைக்கப்பட்டிருந்த காரில் திடீரென தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையை அடுத்த லக்ஷ்மி மில்ஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு அருகே கார்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. அப்போது திடீரென ஒரு காரில் முன் பகுதியில் தீ பிடித்தது. இதனால் அப்பகுதியில் இருந்த மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினார்.
பின்னர் சிறுது நேரத்தில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இதனால் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு காரின் முன் பகுதி மட்டும் சேதமடைந்தது. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்தின் காரணமாக அப்பகுதி முழுவதும் கடுமையான புகை மூட்டம் காணப்பட்டது.