• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு ஜே.சி.ஐ. (JCI) அங்கீகாரம்

October 19, 2024 தண்டோரா குழு

கோவையில் உள்ள ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சர்வதேச தர நிலைகளில் முன்னனி அங்கீகாரமான ஜாயின்ட் கமிஷன் இன்டர்நேஷனல் எனும் ஜே.சி.ஐ.அங்கீகாரத்தை சென்னை தவிர்த்து தமிழக அளவில் பெற்ற முதல் மருத்துவமனை என்ற பெருமையை பெற்றுள்ளது.

கோவை நீலாம்பூரில் உள்ள ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக சர்வதேச அளவில் உயர்தர சுகாதார சேவைகளை வழங்குவதற்காக மருத்துவலனைகளின் வரிசையில் இணைந்துள்ளது.

அதன்படி சர்வதேச பராமரிப்பு தரங்களை முறையாக கடைபிடிக்கும் சுகாதார நிறுவனங்களுக்கு வழங்கப்படும் ஜாயின்ட் கமிஷன் இன்டர்நேஷனல் எனும் ஜே.சி.ஐ.அங்கீகாரம் ராயல் கேர் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான டாக்டர் மாதேஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மதிப்புமிக்க ஜேசிஐ அங்கீகாரத்தைப் பெறுவதில் நாங்கள் மிகவும் பெருமை கொள்கிறோம்.இந்தச் சாதனை மருத்துவமனை நிர்வாகம் நோயாளிகளை பராமரிப்பதிலும்,
அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் உலகளாவிய தரநிலைகளை நிலைநிறுத்துவதில் எங்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு இது ஒரு சான்று என கருதுகிறோம்.

குறிப்பாக மதிப்புமிக்க இந்த தங்கத் தர அங்கீகாரத்தைப் பெற்ற தமிழ்நாட்டின் (சென்னையைத் தவிர) முதல் மருத்துவமனை என்பதில் நிர்வாக இயக்குனர் என்ற முறையில் தாம் பெருமை கொள்கிறோம்.

பேட்டியின் போது மருத்துவமனையின் குவாலிட்டி சர்வீஸ் பிரிவின் துணை தலைவர் மருத்துவர் காந்திராஜன்,சர்வதேச தொடர்பு அதிகாரி டாக்டர் மனோகர், மருத்துவ இயக்குனர் டாக்டர் பரந்தாமன் சேதுபதி,தலைமை செயல் அலுவலர் டாக்டர் மணி செந்தில் குமார் மார்க்கெட்டிங் பொது மேலாளர் வெங்கடேசன்
ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க