March 31, 2021
தண்டோரா குழு
கோவை – ராமேஸ்வரம் இடையே ஏப்ரல் 27ம் தேதி முதல் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கோவை ரயில் நிலையத்தில் இருந்து ஏப்ரல் 27ம் தேதி முதல் செவ்வாய்க்கிழமைகளில் இரவு 7.45 மணிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் மறுநாள் காலை 6.15 மணிக்கு ராமேஸ்வரத்தை சென்றடையும்.இதேபோல்,ராமேஸ்வரத்தில் இருந்து ஏப்ரல் 28ம் தேதி முதல் புதன்கிழமைகளில் இரவு 7.25 மணிக்கு இயக்கப்படும்.
வாராந்திர சிறப்பு ரயில் மறுநாள் காலை 6.30 மணிக்கு கோவை வந்தடையும். இந்த ரயில்கள் திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, காரைக்குடி, தேவகோட்டை சாலை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.