• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை ராமநாதபுரம் பகுதியில் (GIFTERY) ‘கிப்ட்டேரி ஷாப்’ இரண்டாவது கிளை துவக்கம்

October 3, 2023 தண்டோரா குழு

கோவை திருச்சி சாலை ராமநாதபுரம் ஆல் இந்தியன் ரேடியோ எதிரே அமைந்துள்ள கிப்ட்டேரி ஷாப் இரண்டாவது கிளையின் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக காவேரி குரூப் ஆப் கம்பெனியின் இணை நிர்வாக இயக்குனர் அரிமா வினோத் சிங் ரத்தோர் மற்றும் தி பிசினஸ் ட்ரான்ஸ்பர்மேஷன் குரு சௌகத் ஆகியோர் கலந்துகொண்டு கிப்ட்டேரி ஷாப் இரண்டாவது கிளையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் வினோத் சிங் ரத்தோர் மற்றும் சவுக்கத் ஆகியோர் கிப்டேரி ஷாப் நிர்வாக இயக்குனர் நிஷா பேகம் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

காவேரி குரூப் ஆஃப் கம்பெனியின் நிர்வாக இயக்குனர் வினோத் சிங் ரத்தோர் கூறுகையில்,

வளர்ச்சி என்பது நாமும் முன்னேறி மற்றவர்களின் முன்னேற செய்ய வேண்டும். கிப்ட்டேரி ஷாப் நிர்வாக இயக்குனர் நிஷா பேகம் சிறந்த பெண் தொழில் முனைவராக செயல்பட்டு வருகிறார். கிப்டேரி ஷாப் மூலம் கார்ப்பரேட் கிப்ட் மற்றும் பிறந்த நாள் கிப்ட் போன்ற பல்வேறு கிப்ட்களை பொதுமக்களின் விருப்பத்திற்கு ஏற்ப செய்து வருகின்றனர். மென்மேலும் கிப்ட்டேரி ஷாப் அடுத்தடுத்த வளர்ச்சி பாதைகளில் செல்ல எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இது குறித்து கிப்டேரி ஷாப் நிர்வாக இயக்குனர் நிஷா பேகம் கூறுகையில்,

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் எங்களது கிப்ட்டேரி ஷாப் முதல் கிளையை துவக்கி உள்ளோம்.அதற்கு மிகுந்த வரவேற்பு உள்ளதால், விரைவில் இரண்டாவது கிளையை கோவை ராமநாதபுரத்தில் இன்று துவக்கி உள்ளோம்.அனைவருக்கும் பிராண்ட் என்பது முக்கியமான ஒன்றாக உள்ளது. எங்களது கிப்ட்டேரி ஷாப்பில் முக்கிய குறிக்கோள் அனைத்து நிறுவனத்தின் பிராண்டுகளை அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப பொருட்களில் அவர்களது பிராண்டுகளை வைத்து வழங்கி வருகின்றோம்.

இந்த சேவையை தரமான முறையில் சிறப்பாக செய்து வருகின்றோம்.இதன் மூலம் தற்போது பி எஸ் ஜி நிறுவனத்திற்கும்,ஐடி கம்பெனி போன்ற பல்வேறு நிறுவனத்திற்கும் பிராண்டிங் மூலம் கிப்டேரி செய்து வருகின்றோம் என தெரிவித்தார்.

மேலும் படிக்க