• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ரயில் நிலையம் வரும், பயணிகள் உடைமைகளையும், பொருட்களையும் பாதுகாத்து கொள்ள வேண்டும்

April 5, 2022 தண்டோரா குழு

கோவை ரயில் நிலையம் வரும், இரயில் பயணிகள் தங்களது, உடைமைகளையும், பொருட்களையும் பாதுகாத்து கொள்ள வேண்டும் என இரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோவை இரயில் நிலையத்தில், நேற்று, கோவை பேருர் பகுதியை சார்ந்த 50 வயதான, சித்ரா என்ற பெண்மணி,விருதாச்சலம் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்ய கோவை இரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் முன்பதிவு மையத்திற்கு வந்துள்ளார்.

அங்கு டிக்கெட் முன்பதிவு செய்த இடத்தில், தனது அலைபேசியை வைத்தவர் அதனை மறந்து சென்றுள்ளார். மீண்டும் வீடு சென்ற பின்னர் தனது அலைபேசி யை தேடிய போது அதனை காணாமல் தேடியுள்ளார். அதனை தொடர்ந்து மீண்டும் இரயில் நிலையம் வந்து இரயில்வே காவல்துறையினரிடம் இது குறித்து முறையிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, அங்குள்ள சிசிடிவி காட்சகளை சோதனை செய்த பொது, அவர் டிக்கெட் எடுக்கும் பகுதியில் அலைபேசியை வைத்து செல்வது பதிவாகி இருந்தது, உடனடியாக அந்த பகுதியில் சென்று பார்த்த பொழுது அலைபேசி அங்கேயே இருந்தது உடனடியாக அந்த அலைபேசி மீட்கப்பட்டு உரிய நபரிடம் வழங்கபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இரயில் நிலையத்திற்ககு வருகை தருகின்ற பொது மக்கள் தங்களது உடைமைகளையும், பொருட்களையும் தாங்களாகவே பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று தெரவித்துள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க