December 5, 2020
தண்டோரா குழு
பாபரி மசூதி இடிப்பு தினத்தையொட்டி கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது ரயில் மற்றும் விமான நிலையங்களில் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.
பாபரி மசூதி இடிப்பு தினம் டிசம்பர் 6 நாளை அனுசரிக்கப்படுகிறது எனவே அசம்பாவிதங்களை தவிர்க்க கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண் உத்தரவின் பேரில் கோவை மாநகர பகுதியில் உள்ள முக்கிய இடங்கள் வழிபாட்டுத் தலங்களில் ஆயிரம் போலீசாரும் மாவட்ட எஸ்.பி அருளரசு உத்தரவின்பேரில் மாவட்ட பகுதிகளில் 1200 போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
கோவை ரயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.ரயில் நிலைய வளாகத்தில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் கோவை விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்ட கண்காணிக்கப்படுகிறது பயணிகள் தவிர பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அசம்பாவிதங்களை தவிர்க்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.