• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ரயில் நிலையத்தில் உபயோகப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு முகக்கவசம்

July 1, 2022 தண்டோரா குழு

கோவை ரயில் நிலையத்தில் உபயோகப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு முகக்கவசம் இலவசமாக,’டிராப் என் டிரா’ என்ற புதிய முயற்சியின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக கோவை ரயில் நிலையத்தில்,உபயோகப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை திரும்ப பெறும் முயற்சி பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. டிராப் என் டிரா’ என்னும் திரும்ப பெறும் புதிய முறை கோவை ரயில் நிலையத்தின் பிளாட்பார்ம் எண்:3-ல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த முறையின் மூலம் பயணிகள் உபயோகப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை இயந்திரத்தின் உட்பகுதியில் செலுத்தி, விருப்பமான தேர்வை தேர்ந்தெடுத்து,’ இலவசமாக ஒரு முககவசம்’ அல்லது ‘எடையை சரிபார்க்கலாம்’.இந்த இயந்திரத்தின் உட்பகுதியில் செலுத்தப்பட்ட உபயோகப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் துண்டு துண்டாகப்பட்டு, தனி தொட்டிகள் மூலம் மறுசுழற்சி செயல்முறைக்கு சேகரிக்கப்படும்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த டிராப் என் டிரா என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம், இந்த புதுமையான தயாரிப்பை உற்பத்தி செய்கிறது. இந்த இயந்திரம் கோவை ரயில் நிலையத்தில் நிறுவப்படுவதற்காக லேடீஸ் சர்க்கிள் நிறுவனத்தால் ஸ்பான்சர் செய்யப்பட்டது.

மேலும் படிக்க