July 16, 2021
தண்டோரா குழு
கோவை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டலால் வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்பு போலிசார் சோதனை மேற்கொண்டனர்.
கோவை காவல் கட்டப்பாட்டு அறைக்கு இன்று காலை 7 மணியளவில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு வைப்பது குறித்து கேரளாவை சேர்ந்த இருவர் பேசிக் கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அங்கு வெடிகுண்டு கண்டுபிடிப்பு செயலிழப்பு பிரிவு போலிசார் மற்றும் மத்திய ரயில்வே பாதுகாப்பு படை வெடிகுண்டு கண்காணிப்பு பிரிவு போலிசார் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர்.