March 4, 2020
தண்டோரா குழு
கோவை ஈச்சனாரி அருகில் உள்ள ரத்தினம் கல்லூரியில் விசுவல் கம்யூனிகேஷன் மற்றும் ஆடைவடிவமைப்பு, பேஷன் டெக்னாலஜி படிக்கும் மாணவர்கள் சார்பாக கல்லூரி வளாகத்தில் துறைசார்ந்த பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
இந்த விழாவில் ரத்தினம் கல்விகுழுமங்களின் சேர்மன் மதன் செந்தில் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பிக்பாஸ் புகழ் யாசிகா ஆனந்த் கலந்து கொண்டார். இந்த விழாவில் ஆடை வடிவமைப்பு மற்றும் பேசன் டெக்னாலஜி படிக்கும் மாணவிகளின், பேஷன் ஷோ, அனைவரையும் மிகவும் கவர்ந்தது. ஆடை வடிவமைப்பு துறை மாணவர்கள் தாங்கள் வடிவமைத்த ஆடைகளை குழந்தைகள் அணிந்து அவர்களுடன் ஒய்யாரமாக நடந்துவந்தனர்.
மேலும் விசுவல் கம்யூனிகேஷன் படிக்கும் மாணவர்கள் தயாரித்த குறும்படங்கள் ஒளிபரப்பபட்டது. மாணவர்களின் நடனம் மெய்சிலிர்க்கும் வகையில் அமைந்தது. இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு நடிகை யாசிகா ஆனந்த் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி கௌரவித்தார்.
இந்த விழாவில் ரத்தினம் கல்விகுழுமங்களின் முதன்மை செயல் அலுவலர் மாணிக்கம் உட்பட, பல்வேறு கல்லூரிகளில் இருந்து வந்த மாணவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டார்கள்.