• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை யுவ பாரதி பப்ளிக் பள்ளியில் தளிர் வார விழா

November 9, 2019 தண்டோரா குழு

‘குழந்தைகளின் நலனுக்காகவும் மேம்பாட்டுக்காகவும் அனைவரும் பாடுபட வேண்டும்’ என, சாந்தி ஆஸ்மரத்தின் தலைவர் வினு அறம் வலியுறுத்தினார்.

கோவை யுவபாரதி மெட்ரிகுலேசன் பள்ளியில் நடந்த தளிர் வார விழா கொண்டாட்டத்தில் தலைமை விருந்தினராக சாந்தி ஆஸ்ரமத்தின் தலைவர் வினு அறம் பங்கேற்று பேசினார்.

அப்போது பேசிய அவர்,

குழந்தைகளுக்கு அடிப்படையான பொறுப்புகளை உருவாக்கும் வகையில், ‘நேர்மை மற்றும் மதிப்பு, இரக்க குணம், கவனித்தல், தொடர்பு கொள்ளுதல், சுய விழிப்புணர்வு, உரிமைகளும் பொறுப்புகளும், கலாச்சாரங்களுக்கு இடையேயான உறவுகள், சமுதாய விழிப்புணர்வு, சமுதாய தலைமை பொறுப்பு மற்றும் தன்னம்பிக்கை போன்றவைகளை கற்பிக்க வேண்டும். பொறுப்புள்ள குடிமக்களாக வளர இத்தகைய தரங்களை உருவாக்குவதே மிகழ்ச்சியான தேசத்தை உருவாக்கும் ’ என பேசினார்.

யங் இன்டியன் கோயம்புத்துார் கிளையின் தலைவர் பி.பிரவீன்குமார் பேசுகையில்,

‘இளம் தலைமுறையில் தலைமையை உருவாக்குவதும், நாட்டின் மேம்பாட்டுக்கும் பாடுபட்டு வருகிறது யங் இன்டியன் அமைப்பு. இதை அடிப்படையாக்கொண்டு, குழந்தைகளுக்கு, சமுதாய நுண்ணறிவு, சுற்றுச் சூழல் விழிப்புணர்வு, இணையங்களிடமிருந்து பாதுகாப்பு, சுய கட்டுப்பாடு, சாலைபாதுகாப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை பள்ளி குழந்தைகள் உணர்ந்து வளர தளிர் அமைப்பு கவனம் செலுத்தி வருகிறது,’ என்றார்.

தலைமை விருந்தினர் தளிர் உறுதிமொழியை அனைவரும் ஏற்க வெளியிட்டார். யங் இன்டியன் அமைப்பின் தளிர் அமைப்பின் தலைவர் பிரீதா பிரியதர்ஷிணி நாயுடு, ‘ தற்போது தளிர் திட்டம் பற்றி 15000 மாணவர்கள் அறிந்துள்ளனர். யுவபாரதி பப்ளிக் பள்ளியில் நடக்கும் இந்த விழாவில், 250 மாணவர்களைக் கொண்டு புதிய திட்டம் துவக்கப்பட்டுள்ளது. முன்னதாக, யுவபாரதி பப்ளிக் பள்ளியின் முதல்வர் கீதா ஜெயச்சந்திரன் அனைவரையும் வரவேற்றார்.

மேலும் படிக்க