• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை யானைகள் முகாமில் களிறு திட்டம் கலந்துரையாடல்

March 6, 2018

கோவையில் வறட்சி காலங்களில் நீருக்காக யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க கோவை வனக்கோட்டத்தில் 105 தண்ணீர் தொட்டிகள் சீரமைக்கப்பட்டு தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்று வருவதாக வனப்பாதுகாவலர் தெரிவித்துள்ளார்.

கோவை சாடிவயல் யானைகள் முகாமில் யானைகள் மனித மோதலை தடுக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட களிறு திட்டம் குறித்து ஊடகவியலாளருடனான கலந்துரையாடல் கூட்டம் இன்று(மார்ச் 6)நடைபெற்றது.

இதில் சாடிவயலில் உள்ள கும்கி யானை சுஜயை வைத்து யானைகளை வனத்திற்கு விரட்டும் முயற்சி குறித்தும் விவரிக்கப்பட்டது. யானைகள் ஊருக்குள் புகுவது குறித்த கணக்கெடுப்பில் கடந்த ஒரு வருட காலத்தில் மட்டும் கோவையில் உள்ள 7 வனசரகங்களில் ஒருந்து 1806 முறை யானைகள் ஊருக்குள் நுழைந்துள்ளதாகவும், அதில் பெரும்பாலனவை உணவு தேடி விளை நிலைங்களில் புகுந்துள்ளது தெரியவந்துள்ளது.

எனவே யானைகள் வந்த பின் தடுக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கையோடு, வனத்தில் இருந்து வெளியே வராமல் தவிர்க்க  களிறு திட்டம் மூலம் ஒதுக்கப்பட்ட  1.38 கோடி ரூபாய் நிதியை பயண்படுத்தி அகழி அமைப்பது, வனத்தில் தண்ணீர் தொட்டி அமைப்பது, மற்றும்  யானைகளுக்கு தேவையான உணவுகளை காட்டிலே விளைய வைப்பதற்கான ஆய்வும் திட்டம் குறித்தும் விவரிக்கப்பட்டது.

மேலும் 7 வனசரகங்களில் யானைகள் அதிகம் நடமாடக் கூடிய  45 கிராமங்கள் கண்டறியப்பட்டு, போதிய கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

கோடை காலத்தில் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் வறட்சி பாதிப்பு ஏற்பட்டுள்ள காரணத்தால் வன விலங்குகளுக்காக கோவை கோட்டதில் 105 தண்ணீர் தொட்டில் வனப்பகுதியில் பாராமரிக்கப்பட்டு , வாரும் ஒரு முறை நீர் நிரப்பும் பணி நடைபெற்று வருவதாக,கோவை கோட்ட வனப்பாதுகாவலர் ராமசுப்புரமணியம் தெரிவித்தார்.

மேலும்,தற்போது கோவை சாடிவயல் யானைகள் முகாமிற்கு சேரன், ஜான் என்ற 2 கும்கி யானைகள் முதுமலை யானைகள் முகாமில் இருந்து கொண்டு வரப்படுகிறதாகபும்,சுஜய்,பாரி என்ற இரு கும்கி யானைகள் சாடிவயல் முகாமிலிருந்து வேறு முகாமிற்கு மாற்றபடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க