June 2, 2021
தண்டோரா குழு
கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.யாக பணிபுரிந்தவர் அமல்ராஜ். இவர் கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று சென்னைக்கு சென்றுள்ளார். அவருக்கு பதிலாக மேற்கு மண்டல புதிய போலீஸ் ஐஜியாக ஆர்.சுதாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இதற்கு முன் மதுரை சரக டிஐஜி ஆக பணிபுரிந்து ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார், இதேபோல கோவை சரக டி.ஐ.ஜி பணிபுரிபவர் நரேந்திரன் நாயர் .இவர் மாற்றப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக திண்டுக்கல் சரக டிஐஜி பணிபுரிந்த முத்துசாமி நியமிக்க பட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் மேலும் பல ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.