• Download mobile app
16 Aug 2025, SaturdayEdition - 3475
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை – மேட்டுப்பாளையம் ரயில் நவம்பர் 1 முதல் துடியலூர், பெரியநாயக்கன்பாளையத்தில் நின்று செல்லும்

October 30, 2021 தண்டோரா குழு

கோவை – மேட்டுப்பாளையம் ரயில் நவம்பர் 1 ஆம் தேதி முதல் துடியலூர், பெரியநாயக்கன்பாளையம் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை – மேட்டுப்பாளையம் இடையே காலை 6 முதல் இரவு 9 மணி வரை தினமும் 5 முறை பயணிகள் ரயிலானது இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயிலானது, கடந்த ஆண்டு கொரோனோ நோய்த்தொற்று பாதிப்பால் ரத்து செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து,கொரோனா நோய்த்தொற்று குறைந்த நிலையில்,கடந்த ஜூலை மாதம் முதல் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு காலை 8.20 மணிக்கும், கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு மாலை 5.55 மணிக்கு ஓரு முறை மட்டுமே பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரயிலானது,வடகோவை, காரமடை நிலையங்களில் மட்டுமே நிறுத்தப்பட்டது. துடியலூர்,பெரியநாயக்கன்பாளையம் நிலையத்தில் இருந்து கோவைக்கு செல்வோர், கோவையில் இருந்து துடியலூர், பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளில் உள்ளி நிறுவனங்களில் பணிபுரிவோர், கல்வி நிறுவனங்களில் பயில்வோரின் நலன் கருதியும், கவுண்டம்பாளையம், சுப்பிரமணியம்பாளையம் பிரிவு, பெரியநாயக்கன்பாளையத்தில் மேம்பால கட்டுமானப் பணி நடப்பதால் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் அவதிக்குள்ளாகி வரும் நிலையிலும் துடியலூர், பெரியநாயக்கன்பாளையம் நிலையங்களில் ரயிலை நிறுத்த பயணிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து,வருகின்ற நவம்பர் 1 ஆம் தேதி முதல் கோவை – மேட்டுப்பாளையம் ரயில் துடியலூர், பெரியநாயக்கன்பாளையம் நிலையங்களில் நின்று செல்லும் என சேலம் கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க