December 24, 2020
கோவை கவுண்டம்பாளையம் அருகில் நடைபெறு வரும் பாலம் வேலைகள் துரிதப்படுத்தும் விதமாக கோவை – மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. இந்த போக்குவரத்து மாற்றம் வரும் ஜனவரி 02 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ராஜாமணி கூறியிருப்பதாவது:
கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் இரு மார்க்கமாகவும் செல்லும் வாகனங்கள் வரும் ஜனவரி 12ம் தேதி முதல் இரண்டு மாதங்களுக்கு கீழ்க்கண்ட மாற்றுப்பாதையில் இயக்கிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இந்த மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.
கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி செல்லும் வாகனங்கள் :
சாய்பாபா கோயில் – தடாகம் – வேலாண்டிபாளையம் – கே.என்.ஜி புதுார் – கணுவாய் – அப்பநாயக்கன்பாளையம் – துடியலூர் – மேட்டுப்பாளையம். அல்லது
சாய்பாபா கோயில் – தடாகம் – வேலாண்டிபாளையம் – கே.என்.ஜி புதூர் – ஜி.என் மில்ஸ் – துடியலூர்- மேட்டுப்பாளையம். அல்லது டி.வி.எஸ் -ஜி.சி.டி – தடாகம் சாலை – கனுவாய் – துடியலூர் – மேட்டுப்பாளையம் வழியாக செல்ல வேண்டும்.
மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை நோக்கி வரும் வாகனங்கள்:
துடியலூர் – வெள்ளக்கிணறு – உருமாண்டம்பாளையம் – உடையம்பாளையம் – மணியக்காரன்பாளையம் – கணபதி – காந்திபுரம். அல்லது கவுண்டர் மில்ஸ் – உருமாண்டம்பாளையம் – உடையப்பாளையம் – மணியக்காரன்பாளையம் – சங்கனூர் எரு கம்பெனி – காந்திபுரம் வழியாக செல்ல வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.
இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆம்புலன்கள் மட்டும் வழக்கம் போல மேட்டுப்பாளையம் சாலையில் செல்வதற்கு வழி செய்யப்பட்டுள்ளது.